அதிமுக அலுவலக சீல் விவகாரம்… இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு… அப்செட்டில் ஓபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 2:43 pm
Quick Share

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார். மேலும், சாலையில் இருந்த வாகனங்களை எல்லாம் அடித்து நொறுக்கினர்.

இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், வருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் தனித்தனியே மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்ட நீதிபதி சதீஷ்குமார், அதிமுக அலுவலகத்திற்கான சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், அதிமுக அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்பினர், உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 435

0

0