நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்குகிறது : சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

Author: Babu Lakshmanan
8 September 2021, 12:27 pm
admk - updatenews360 (2)
Quick Share

பேசுவதற்கு அனுமதி கொடுப்பதில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று கூடியதும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி பேச முற்பட்டார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சில பிரச்சனை குறித்து பேச முற்பட்டார்.

ஆனால், இருவரையும் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால், எதிர்க்கட்சி தலைவர், அவைமுன்னவர் ஆகியோரிடையே சில விவாதமும் நடந்தன. ஆனால், அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் தங்களுக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி :- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த விற்பனைக்குழு திரும்பப் பெறப்படும் என்று திமுக சட்டமுன்வடிவு கொண்டு வந்துள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், அதனையும் திமுக அரசு புறக்கணித்துள்ளது.

சென்னை உயர்கல்வி வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து வந்தோம். தற்போது, அங்கிருந்த ஏணியை அகற்றி விட்டார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு புதிய கட்டுபபாடுகளை விதித்து, ஏழை, எளிய பெண்களுக்கு கிடைக்காமல் வழிவகை செய்துவிட்டார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு புறக்கணித்து வருகிறது, எனக் கூறினார்.

Views: - 328

0

0