சென்னை ; அதிகாரிகளை, பொதுமக்களை மிரட்டியே ஆட்சி நடத்தும், இந்த திமுக குப்பைகளும் , குடும்ப அரசியலால் வளர்ந்து வரும் விஷ பாம்புகளும் ஒழியும் நாளே தமிழ்நாட்டிற்கு உண்மையான விடியல் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி கமிஷனர் என்ற அதிகாரமிக்க பொறுப்பில் இருந்து செயல்பட்டு வரும் திரு. ராதாகிருஷ்ணன் IAS அவர்கள், பொது வெளியில் நன்கு அறியப்பட்ட இந்திய ஆட்சி பணி அதிகாரி, அவரே இந்த ஆட்சியில் மாமூல் கொடுத்துதான் ஒரு பொது நிகழ்விற்கு செல்ல வேண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தத்துகுரியது.
திமுக கவுன்சிலருக்கும், MLAவுக்கும் சேர வேண்டிய மாமூல் பணத்தை நானே என்னுடைய சொந்த காசில் இருந்து தந்து விடுகிறேன் என சொல்லும் நிலைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் தள்ளப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் சாமானிய மக்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கி உள்ளது !
எந்த இடத்தில் எல்லாம் திமுக அரசை சார்ந்தவர்கள் மாமூல் வாங்குகிறார்கள் என்ற லிஸ்ட் என்னிடம் உள்ளது, அதை நான் லைவ் டிவியில் சொல்லிவிடுவேன் என சொல்லும் அளவிற்கு, ஊடகத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை கூட இந்த விடியா அரசின் மீது இல்லை என்பது நிரூபணமாகிறது.
திமுக கவுன்சிலர், அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அந்த பதவிக்கு உண்டான அடிப்படை அதிகாரத்தை கூட அரசு அதிகாரிகளுக்கு கொடுக்காமல், அவர்களுக்கு கை கட்டி வாய் மூடி சேவகம் செய்ய வேண்டிய நிலையில் தான், இன்றைய உயர் அதிகாரிகள் இந்த விடியா அரசில் உள்ளனர் என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அதிகாரிகளை, பொதுமக்களை மிரட்டியே ஆட்சி நடத்தும், இந்த திமுக குப்பைகளும் , குடும்ப அரசியலால் வளர்ந்து வரும் விஷ பாம்புகளும் ஒழியும் நாளே தமிழ்நாட்டிற்கு உண்மையான விடியல், என தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.