‘நம்மில் ஒருவர், நமக்கான தலைவர்’ : எடப்பாடியாரை முன்னிறுத்தி தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக..!

By: Babu
7 October 2020, 6:47 pm
Quick Share

சென்னை : அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு இன்று அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தல் சந்திக்க இருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

eps cm- updatenews360

தற்போது முதலமைச்சராக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்றால் ஆட்சியை வழிநடத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கட்சியையும், ஆட்சியையும் ஒருங்கிணைத்து, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கு அதிகரித்துள்ளது.

இதனிடையே, தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி ஏற்றார்.

கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து, சட்டப்பேரவை தேர்தலுக்கான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்து விட்டது.

admk - nammil oruvar namakkan thtalaivar - updatenews360

இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாளான இன்றே, ‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ எனக் கூறி எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக தேர்தலுக்கான புரமோஷனை தொடங்கி விட்டது. இது அதிமுகவினருக்கும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 51

0

0