பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள்… அதிமுக கையில் பட்டியல் : இன்று அறிவிப்பு வெளியாகிறது…?

5 March 2021, 3:39 pm
pmk - admk - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிட 23 தொகுதிகள் எவையெவை என்பது குறித்த அறிவிப்பை அதிமுக இன்று வெளியிடுகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.,6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 12ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாமகவின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்திருப்பது, வன்னிய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, அதிமுக – பாமக இடையிலான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக – பாமக இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. அப்போது, சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் பட்டியல் அதிமுகவின் தலைமையிடம் சமர்பிக்கப்பட்டது.

பாமக விரும்பும் தொகுதிகள் :- வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், ஓமலூர், மேட்டூர், பரமத்தி வேலூர், கீழ்வேளூர், குறிஞ்சிப்பாடி.

இந்த நிலையில், பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவையெவை என்பதை அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Views: - 1

1

0