தமிழக அரசைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், நாளை சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தில், அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கழக அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம், கழக அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் வழங்கி உள்ளனர், என தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.