Exclusive: பாஜகவின் ரஜினி பாசம்….! பாய தயாராகும் எடப்பாடி..! வெயிட்டிங்கில் திகுதிகு அரசியல்..!

15 February 2020, 8:53 am
Quick Share

சென்னை: ரஜினி மீது பாஜக அதிக பாசம் காட்டுவதால் கடும் அதிருப்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று நேற்றோடு 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 4ம் ஆண்டும் துவங்கிவிட்டது. ஆட்சிக்கு எந்த பங்கமும் இல்லாமல் சென்று கொண்டு இருப்பதால் குஷியில் இருக்கின்றனர் அதிமுகவினர்.

இந்த ஆனந்த தாண்டவம் ஒரு பக்கம் இருக்க… சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க தயாராகி விட்டாராம் முதலமைச்சர். அதற்கேற்ப தான் அண்மையில் மத்திய அரசின் பல திட்டங்களை அதிரடியாக எதிர்த்து வருகிறாராம்.

இந்த அதிரடி… ரஜினியின் போயஸ் தோட்ட வாசல் பேட்டியில் இருந்து ஆரம்பமாகி இருக்கிறதாம். மத்திய அரசின் பல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இங்கே தடுமாறி கொண்டு இருக்க…. ரஜினியை விடாமல் பாஜக துரத்துவதும்… அவருக்கு என்று சில தனித்துவமான பாசத்தை காட்டுவதும் அதிமுக முகாமில் எதிர்ப்பலைகளை உண்டு பண்ணியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசுக்கு ஆதரவு என்பதாலேயே தமிழகத்தில் பல அவதூறு பேச்சுகளையும், விமர்சனங்களையும் இன்றளவும் எதிர்கொண்டு வருகிறோம்.. ஆனால் ரஜினிக்கு மட்டும் பாஜக அளிக்கும் முக்கியத்துவம் கண்டு டென்ஷனில் இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

ஏன் என்றால்… நாளை ரஜினியின் அரசியல் வருகை, அதிமுகவுக்கும், ஆட்சிக்கும் சேதாரத்தை ஏற்படுத்திவிடும் என்று அதிமுக தலைமை பலமாக நம்புகிறதாம். எனவே, பாஜகவின் ரஜினி பாசம், அதிமுக தலைமையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறதாம்.

எனவே, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல… தேர்தலுக்கான வியூகம் வகுக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அதிமுக தலைமை, மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு திட்டங்களுக்கு அணை போட முடிவு செய்துவிட்டதாம்.

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, வேளாண் மண்டலம் அறிவிப்பு உள்ளிட்ட அதிரடிகள் அரங்கேறியதாம். இனி.. முழுக்க, முழுக்க என்று இல்லா விட்டாலும், எதிர்ப்பு என்பதும் இருக்கும் என்று அதிமுக முகாமில் இருந்து தகவல்கள் கசிய விடப்படுகின்றன.

இனி பாருங்கள்… இந்த எடப்பாடி அய்யாவின் ஆட்டத்தை என்று ரஜினியின் காளி ஸ்டைலில் சிரிக்கின்றனர் அதிமுக சீனியர்கள். ஆக மொத்தம்… தமது பழைய வேகத்தை அதிமுக ஆரம்பித்து விட்டது என்பது தான் அரசியல் ஆய்வாளர்களின் கருத்து..!

Leave a Reply