மீண்டும் வலம் வருகிறாரா வைத்திலிங்கம்..? காத்திருக்கும் புதிய பதவி..! குஷியில் ஆதரவாளர்கள்

6 August 2020, 11:25 am
Quick Share

சென்னை: அதிமுகவில் மிக விரைவில் வைத்திலிங்கத்துக்கு புதிய பொறுப்புகள் வரக்கூடும் என்ற தகவலால் அவரது ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.

அதிமுக தேர்தல் களத்துக்கு கன ஜரூராக தயாராகி வரும் அதே வேளையில் கட்சி பொறுப்புக்கு ஆட்களை நியமிக்கப்படும் பணிகளும் வேகம் எடுத்துள்ளன. அதில் குறிப்பாக அதிமுக ஒரு முக்கிய நடவடிக்கையாக எடுக்க இருப்பது தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாக பிரித்து மண்டல செயலாளர் பதவி நியமனம் வழங்குவது தான்.

இந்த மண்டல செயலாளர் பதிவுக்கு டிக் அடிக்கப்பட வேண்டிய நபர்கள் லிஸ்டில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் அப்படியே தஞ்சையில் உள்ள அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக கடுமையான வருத்தத்தில் உள்ள அவரை சமாதானப்படுத்த இந்த பதவி தரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் இடம்பெற்று இருப்பவர் தான் வைத்திலிங்கம்.

மற்ற 4 பேரும் உச்சக்கட்டமாக அரசியல் வானத்தில் வலம்வர, ஓஹோவென்று இருந்த வைத்திலிங்கம் கட்சி பணிகளில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். அதற்கு இப்போது முடிவுரை எழுதும் வண்ணம், அவருக்கு மத்திய மண்டல செயலாளர் பதவி தேடி வர போகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

தமிழகத்தில் கட்சி நடவடிக்கைகளை மேம்படுத்த மொத்தம் 5 மண்டல செயலாளர்களை நியமிக்க இருக்கிறது அதிமுக. அதில் மத்திய மண்டல செயலாளர் வைத்திலிங்கத்துக்கு என கன்பார்ம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா இருந்த காலத்தில் இவரது விசுவாசத்தை கண்டு தரப்பட்டது தான் ராஜ்சபா எம்பி பதவி. ஆனால் அவரது மறைவுக்கு பிறகு, எதிலும் முக்கியத்துவம் தரப்படாததால் முதலமைச்சரிடமே மத்திய அமைச்சர் பதவி வாங்கி தருமாறு அவர் கேட்டதாக தகவல்கள் உண்டு.

ஆனால் ஓபிஎஸ் மகனுக்கு அந்த பெர்த் ரெடியாகி இருப்பதால் வைத்திலிங்கம் வெயிட்டிங் லிட்டில் வைக்கப்பட்டார். இப்போது, அவருக்கு முக்கியத்துவம் மிக்க மத்திய மண்டல செயலாளர் பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. கொரோனா காரணமான அறிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் அந்த அறிவிப்புகள் வெளியாகும், மத்திய மண்டல செயலாளராக பொறுப்பேற்பார் என்று குஷியில் இருக்கின்றனர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்.  

Views: - 12

0

0