திராவிட மாடல் ஆட்சி வந்ததுக்கு அப்பறம் 300 ஏரியை காணல.. திமுக திருந்தப் போறதே இல்லை : அன்புமணி காட்டம்!

திராவிட மாடல் ஆட்சி வந்ததுக்கு அப்பறம் 300 ஏரியை காணல.. திமுக திருந்தப் போறதே இல்லை : அன்புமணி காட்டம்!

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கருத்தரங்கிற்கு பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளேன். உடனடியாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒரு முறை முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். மாநில அரசு ஜாதி மாறி கணக்கெடுப்பு நடத்த முடியாது என முதல்வர் கூறி இருக்கிறார். ஆனால் பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, கர்நாடகாவில் எடுத்திருக்கிறார்கள், சென்சஸ் மற்றும் சர்வே இரண்டிற்கும் உரிய வித்தியாசத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

1931 கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உண்மையாக பின்தங்கி உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு சலுகைகள், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதான் உண்மையான சமூக நீதி. அதிகாரம் இருந்தும் எடுக்க மாட்டோம் என்று கை கழுவி விடுவது சமூக நீதிக்கு எதிரான சமூக அநீதி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம்.

இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது திமுக அரசு தட்டிகழிப்பதற்கு என்ன காரணம். பின் தங்கிய சமுதாயத்தை முன்னிட்டு தான் உண்மையான சமூக நீதி. இட ஒதுக்கீடை 50 சதவீதத்திற்கும் மேல் கிடையாது என தீர்ப்பு வந்து விட்டால் அதற்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம்.

சென்னையில் புயலுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பவில்லை, பலர் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை, பலருக்கு பால் மற்றும் குடிநீர் கூட கிடைக்கவில்லை. அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் ஆனால் வேகம் பத்தவில்லை அதற்கு காரணம் சரியான திட்டமிடுதல் இல்லை. 2015 இல் வந்த வெள்ளத்தை பார்த்த பிறகும் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை, இனிமேலும் பாடம் கற்றுக்கொள்ள போவதில்லை, மக்களும் மறந்து விடுவார்கள்.

உலக வெப்பநிலை அதிகமாகும் காரணங்களால் இன்னும் மோசமான விளைவுகள் வரும், இன்னும் ஐந்து ஆண்டுகளில் சென்னைக்கு அடுத்த பெரிய வெள்ளம் வரும். இன்னும் பத்து ஆண்டுகளில் உணவு தட்டுப்பாடு வரும் ஆனால் தற்போதைய தமிழக அரசு விலை நிலங்களை கைப்பற்றி அதை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே உள்ளது.

சென்னையில் நாலு சதவீத ஆக்கிரமிப்புகள் மட்டும் தான் ஏழை எளிய மக்களின் உள்ளது பாக்கி 96 சதவீதம் அரசு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.

திராவிட ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை. சென்னையில் உள்ள வடிகால் போல இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. ஆனாலும் இந்த சேதங்கள் ஏற்படுவதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நான் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் மற்ற கட்சிகள் இதைப்பற்றி பேசுவதில்லை, இளைஞர்களுக்கும் சினிமா மற்றும் ஐபிஎல் மட்டும்தான் தெரிகிறது இதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதைத் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாக நான் பார்க்கிறேன். இதை அரசு கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மிகப்பெரிய கலவரமாக மாறும்.

அதேபோல கஞ்சா போதை பொருள் பயன்பாடு அதிகமாகியுள்ளது. மதுரையில் தொழில்நுட்ப பூங்கா ஆறு ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. ஆனால் அது பத்தாது இடம் மாற்றி ரிங் ரோடு பகுதியில் இன்னும் பெரியதாக அமைக்க வேண்டும். கனிம வளத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான லாரிகள் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும்.

வெள்ளத்திற்கு 500 கோடி மழைநீர் வடிகால் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆனால் பத்தாது முழுமையாக திட்டங்கள் கொண்டு வர வேண்டும். இருக்கக்கூடிய வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். எண்ணூரில் தூர்வாரப்படாததால் தான் ரசாயன கழிவுகள், எண்ணைகள் கலந்துள்ளது. சென்னைக்கு சென்னையை சுற்றி புதியதாக 10 ஏரிகள் உருவாக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால் அடுத்த தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திக்கிறார்கள். முதல்வர் 4000 கோடி செலவிட்டதாக சொல்கிறார், ஆனால் அமைச்சர் 1900 கோடி தான் செலவிட்டதாக சொல்கிறார்கள். முதலில் இதற்கு அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

சென்னையில் 99 சதவீத நீர் அகற்றப்பட்டு விட்டதாக தலைமைச் செயலாளர் சொல்கிறார். ஆனால் இது பொய். பலர் இறந்ததாக செய்தித்தாள்களில் வருகிறது. ஆனால் அரசு எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. புயலால் அடுத்து தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைபாடு குறித்த கேள்விக்கு: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு விரைவில் அறிவிப்போம்.

திமுக அரசிற்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு:
கூட்டணியில் இருப்பதால் அப்படி சொல்கிறார். நிதிக்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு: நிச்சயமாக நாங்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். வேண்டுமென்றால் நாங்களும் உடன் வந்து அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளோம். தொலைநோக்கு திட்டங்களுக்கான செலவுக்கு கூடுதலாக நிதி வேண்டும்.

ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நிச்சயம் ஒரு மாஸ்டர் பிளான் வேண்டும். பாமக சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை சென்னை வெள்ளத்திற்காக நாங்கள் கொடுக்கின்றோம்.

தென் மாவட்டத்தில் பாமக வளர்ச்சி குறித்த கேள்விக்கு: தென் மாவட்டங்கள் இல்லாமல் மேற்கு மாவட்டத்திலும் எங்களுடைய வளர்ச்சி அதிகமாகி உள்ளது அனைத்துக் கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் எங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.