அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது: அவைத்தலைவர் பதவிக்கான தேர்வு குறித்து ஆலோசனை என தகவல்..!!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 8:50 am
Quick Share

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2வது முறையாக இன்று நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 270 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கோஷமும் வலுத்து வருகிறது. மேலும், கட்சி குறித்த முக்கிய முடிவுகளும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 177

0

0