அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 11:44 am
Admk Former MLa Raid - Updatenews360
Quick Share

நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் அவரது உறவினரின் கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார்.

பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும், இதையொட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு சம்மந்தமாக பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 6 மணி முதல் தீவிர சோதணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பென்னி காம்போர்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ஹரி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் இன்று ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஸ்கரின் உறவினர் ஹரி என்றும், பினாமி பெயரில் இந்த நிறுவனம் நடத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும், கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் ஆவணங்கள் குறித்து தற்பொழுது சோதனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 945

0

0