நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு… எடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம் : வெளியாகும் முக்கிய அறிவிப்பு?!
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி விதிகளின் படி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியை அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அனைவரும் அழைப்பிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கூட உள்ளது.
நாளை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது,
இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.