சட்டசபையில் ஆளுநர் உரை: அதிமுக உறுப்பினர்கள் மட்டுமல்ல…ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியும் வெளிநடப்பு..!!

Author: Aarthi Sivakumar
5 January 2022, 10:42 am
Quick Share

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கலைவாணர் அரங்கில் உள்ள 3வது மாடியில் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி வைத்தார். ஆளுநர் உரையில், இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான். ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை. சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதலமைச்சராக நமது முதலமைச்சர் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதலமைச்சர் பெற்றிருப்பது பெருமைக்குரியது என ஆளூநர் ஆர்.என்.ரவி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம், முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரையைத் தொடங்கியவுடனேயே அவையில் ஒருபுறம் கூச்சலும், குழப்பமும் எழுந்தது. விடுதலை சிறுத்தைக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். விசிக ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியாக இருந்தும், விசிக எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷானவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

Views: - 274

0

0