‘யாரு சாமி அந்த admin’: வாடிக்கையாளர்களின் ரகளைக்கு Cool பதில்…ஏர்டெல்லின் ட்விட்டர் அலப்பறை..!!

Author: Aarthi Sivakumar
6 October 2021, 11:21 am
Quick Share

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் முடங்கியதால், பெரிதும் பாதிக்கப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அளித்த Cool பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவை திடீரென முடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இண்டர்நெட்டை கழுவி ஊற்றினர்.

இந்த விவரம் தெரியாத பலரும் ரகமாக தங்களது ஃவை-பை -யை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்வது, மொபைல் டேட்டாவில்தான் பிரச்னை போல என்று டேட்டாவை ஆஃப் செய்து ஆன் செய்வது, ஃப்ளைட் மோடில் போட்டுவிட்டு மீண்டும் அதனை சாதாரண மோடில் இயக்குவது என அத்தனை வேலைகளையும் பார்த்தனர்.

இன்னும் சில கோவக்கார வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நெட்வொர்க்கை கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர். பின்னர், ஆப்-பில் தான் பிரச்சனை என தெரிந்து கொண்ட வாடிக்கையாளர்கள் மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது, ஏர்டெல் நெட்வொர்க் தான். வயலண்ட் ஆக ட்வீட் செய்த வாடிக்கையாளருக்கு ட்விட்டரில் cool பதில்களை அளித்த ஏர்டெல்லின் ட்வீட்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 102

0

0