ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசுதான் : இபிஎஸ், ஓபிஎஸ் பெருமிதம்!!
16 January 2021, 11:08 amமதுரை : தடைகளை கடந்து ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த பெருமை அதிமுகவிற்கு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிறகு, விழா மேடையில் முதலமைச்சர் பேசியதாவது :- உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் காக்கும் விதமாக, ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்தது அதிமுக அரசுதான்.
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாக, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடந்த அதிமுக அரசு தூணாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைகளை தகர்த்தது அதிமுக அரசுதான்,” எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இருவரும் சுமார் 1 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர். அப்போது, வெற்றி காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கினர்.
0
0