Electric Scooty வாங்குற பிளான் இருக்கா?…அப்போ கவனமா இருங்க: இந்த வீடியோ உங்களுக்கு தான்…!!

Author: Aarthi Sivakumar
29 September 2021, 4:50 pm
Quick Share

மக்களிடையே தற்போது பிரபலமடைந்துள்ள மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்று நடுரோட்டில் திடீரென பற்றி எரியும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் பெரிதும் முயற்சி செய்து வருகின்றனர். எனினும் எலக்ட்ரிக் வாகனங்களில் ஒரு சில குறைகளும் காணப்படவே செய்கின்றன. Eco friendly என்ற காரணத்திற்காக, எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் ப்ரமோட் செய்யப்பட்டாலும், அதிலும் கூட சில பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகனத்தில் திடீரென பெரும் புகை கிளம்பியுள்ளது. இதனால், வாகன ஓட்டி வாகனத்தை நிறுத்திவிட்டு, என்னவென்று பரிசோதித்த அதிக புகையுடன் அந்த வாகனம் குபுகுபுவென தீப்பிடித்து எரிகிறது. இந்த வீடியோ வெளியாகி மின்சார வாகன ஓட்டிகளை சற்று அதிரச் செய்துள்ளது.

மின்சார இருசக்கர வாகனம் வாங்கும் போது அதன் சிறப்பம்சங்கள் மற்றும் நல்ல கம்பெனியின் வாகனங்களை வாங்குவதே சிறந்ததாகும்.

Views: - 541

0

0