அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அறை உருவாக்கம் ; கொரோனாவை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரம்..!!

8 May 2021, 6:44 pm
Quick Share

சென்னை : அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன், தடுப்பூசி இருப்பு, ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பை கண்காணிக்க கொரோனா போர்கால அறை அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அறை உருவாக்கப்படும். அனைத்த மாவட்டங்களிலும் போதியளவு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் தேவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இந்த கொரோனா போர்கால அறையே முதன்மை மையமாக செயல்படும்.

மேலும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் வாயிலாக தனியார் மருத்துவமனைகளுக்கு காலியான ஆக்ஸிஜன் உருளைகளை போதுமான அளவு நிரப்புவதை இந்த போர்கால அறை ஒருங்கிணைக்கும். 104 சேவை மையம், பிற சமூக வலைதளம் வாயிலாக பொதுமக்களுக்கு தேவைப்படும் பிற உதவிகளையும் சென்றடைவதை இந்த கொரோனா போர்கால அறை உறுதிசெய்யும்.

இந்த போர்கால அறை கொரோனா தொடர்பான தரவுகளை சேகரித்து, ஆராய்ந்து கொரோனா அவசரகாலத்தில் மாநிலத்தில் எதிர்பார்க்கப்படும் தேவைகளை அரசுக்கு தெரியப்படுத்தவும், அது குறித்த கொள்கை முடிவுகளை எடுக்கவும் உறுதுணையாக இருக்கும், என கூறப்பட்டுள்ளது.

Views: - 171

0

0