அனைத்து எம்.பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை உறுதி : மக்களவை சபாநாயகர் அறிவிப்பு
10 September 2020, 7:02 pmடெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார்.
ஜுலை மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்போனது. இந்தியாவில் நோய் தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த 6 மாதங்களாவதால், மழைக்கால கூட்டத் தொடரை விரைந்து நடத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
அதன்படி, வரும் 14ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் என அறவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, அவை நடவடிக்கைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உறுப்பினர்களின் வருகையை, மொபைல் செயலி வழியாக பதிவு செய்யப்படும் என்றும், இரு அவைகளும் செயல்படும் என தெரிவித்தார்.
0
0