நாடு முழுவதும் ஊரடங்கு நவ.,30ம் தேதி வரை நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

27 October 2020, 4:41 pm
Cbe Lock Down -Updatenews360
Quick Share

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவ.,30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந் மார்ச் மாதம் இறுதியில்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொற்று கட்டுக்குள் வராததால், படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, படிப்படியான தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தொற்றின் தாக்கத்தை அடிப்படையாக வைத்து தளர்வுகளை அறிவித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவ.,30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்.,30ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6ம் கட்ட தளர்வுகளே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்திற்கான தடை நீக்கப்படுவதாகவும், வேறு மாநிலங்கள் செல்ல இபாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0