நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலம் : புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்..!!!

14 November 2020, 7:03 am
diwali lights - updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் முதன்மையாக விளங்குவது தீபாவளியாகும். இந்தப் பண்டிகையானது இந்துக்கள் மட்டுமல்லாது, அனைத்து மதத்தினரால் பெரும்பாலும் கொண்டாடப்படும் சமத்துவ பண்டிகையாகவே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஐப்பசி அமாவாசை திதியில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் அர்த்தமானது, தீபங்களின் வரிசை என்பதாகும்.

இந்த நன்னாளில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மக்கள் எழுந்து, எண்ணெய் பூசி, குளித்து புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை கடவுகளுக்கு படைத்து வழிபடுவார்கள். அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த நாளில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் பட்டாசுகளை வெடித்தும், மத்தாப்புகளை கொளுத்தியும் குடும்பத்துடனும், அக்கம்பக்கத்தினருடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு கொண்டாடப்படும் இந்த மிகப்பெரிய இனிமையான பண்டிகையில் தொடங்கி மகிழ்ச்சி, இனியும் தொடர தமிழக மற்றும் நாட்டு மக்களுக்கு Updatenews 360 சார்பில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Views: - 28

0

0

1 thought on “நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலம் : புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்..!!!

Comments are closed.