சென்னை: தஞ்சை களிமேடு விபத்தின்போது அதிமுக, பாஜக, திமுகவினர் என அனைவரும் இணைந்து பணியாற்றினர் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். களிமேடு விபத்து குறித்து இன்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,
களிமேடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், காலை 5 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். நேரடியாக சட்டசபை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் அங்கு சென்றோம்.
கடந்த 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல மாணவர்களுக்கு பதக்கங்கள், மாலைகள் சூட்டியிருக்கிறேன். ஆனால், அந்த பிணவறையில் நான் 8ம் வகுப்பு மாணவருக்கு மாலை வைத்தேன் என கண்கலங்கியபடி பேசினார். தொடர்ந்து, முதலமைச்சரிடம் எல்லா உடல்களுக்கும் இங்கே மாலை அணிவித்து விடலாம் எனக் கூறினோம். ஆனால், அதை மறுத்த முதலமைச்சர் அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக சென்று உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் எனக் கூறி அனைத்து வீடுகளுக்கும் நடந்தே சென்று நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அனைவரும் உதவி செய்தார்கள். விபத்து நடந்த பகுதியில் ஊராட்சித் தலைவர் அதிமுகவை சார்ந்தவர், ஒன்றிய கவுன்சிலர் பாஜகவை சார்ந்தவர், மாவட்ட கவுன்சிலர் திமுகவை சார்ந்தவர், இவர்கள் மூன்று பேரும் இணைந்து பணியாற்றினார்கள்.
முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறும் நமது ஆட்சி என்பது களத்தில் பிரதிபலிக்கிறது. அதேபோல், பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.