அனைத்து கோவில்களிலும் அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டம் முடியாத காரியம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

Author: Babu Lakshmanan
16 May 2022, 3:49 pm
Quick Share

சென்னை : மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமானதற்கு காரணமாவர் யாராக இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்க குளுமையான நீர் தெளிப்பான் வசதி, இறையம்சம் பொருந்திய சோலார் விளக்கு ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து கோயில்களிலும் அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்துவது கடினமான காரியம் எனவும், முடிந்த அளவுக்கு திட்டத்தை செயல்படுத்துவோம் என கூறினார். அதே நேரத்தில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமல்ல எனவும், விரும்புவோருக்கு அர்ச்சனை செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.

Views: - 444

0

0