உடையும் திமுக கூட்டணி..? தொகுதி பங்கீட்டில் ம.ம.க.வைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் அதிருப்தி…!!!

2 March 2021, 12:45 pm
stalin - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், டசன் கணக்கிலான கட்சிகளை கூட்டணியில் வைத்துள்ள திமுக, உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், குறைந்த தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு உள்ளிட்ட கண்டிசன்களை போட்டது.

ஆரம்பத்தில் திமுகவின் கண்டிசன்களை அதன் கூட்டணி கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அனைத்தும் சுமூகமாகவே இருக்கிறது என்றே கூறி வந்தனர்.

இப்படியிருக்க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை சுமூகமாக முடித்ததாக திமுக எண்ணிக் கொண்டது. ஆனால், 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

“ஒப்பந்தத்தை கிழித்து மூஞ்சில் எறிந்து விட்டு வாருங்கள், அறிவாலயம் வடமரைக்காயர் தெருவை தேடி வரும், ஏனென்றால் ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தலை விட்டால் இனி ஜென்மத்துக்கு முதல்வராக முடியாது,” என மமகவினர் கூறி வருகின்றனர்.

இதனிடையே, தமுமுக தலைவராக இருந்த ஹைதர் அலி இன்று சசிகலா மற்றும் தினகரனை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சிறுபான்மை அரசியலில் முக்கியத்துவம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. தேசிய கட்சி என்பதால், குறைந்தது தலா 12 தொகுதிகளாவது தேவை என கம்யூனிஸ்ட் தரப்பில் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுகவோ 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற கராராக கூறி விட்டதாகத் தெரிகிறது. இதனால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

cpm - updatenews360

ஏற்கனவே, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்டவை திமுக மீது அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இஸ்லாமிய கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகள் வெளியேறி, அதிமுக அல்லது 3வது அணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தொகுதி பங்கீட்டில் தனது முடிவிற்கு கூட்டணி கட்சிகள் ஒத்துப் போகாததால், திமுக பின்வாங்க வேண்டிய நிலையில் இருப்பது அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 84

1

1