திமுக அமைச்சரின் கார் செல்வதற்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் : இதுதான் சமூக நீதியா? சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 1:11 pm
Ambulance Stop - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்த போது, ஆம்புலன்ஸ்சை போலீசார் காக்க வைத்த சம்பவத்திற்கு கண்டனம் குவிந்து வருன்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள், கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர்.

திருவிடைமருதுார் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஆய்வு செய்ய, அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அணிவகுத்தன.

அப்போது, பாலத்தின் மறு பக்கத்தில், அமைச்சர் கார் செல்லும் வரை, போலீசாரால் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்ற பிறகே, நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அமைச்சர் வாகனத்திற்காக, பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் நிறுத்தியது கண்டனத்திற்குரியது.

ஆம்புலன்ஸ்சில் நோயாளி இருந்தாலும், இல்லா விட்டாலும் அவரசமாக சைரன் ஒலித்தால், உடனே போக்குவரத்தை சரி செய்து, ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட வேண்டும் என்பது தான் விதி. இது கூட தெரியாமல் போலீசார் இருந்துள்ளனர். ஒரு வேளை ஆம்புலன்ஸ்சில் இருந்தவர்கள் இறந்திருந்தால் யார் பொறுப்பேற்பது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 240

0

0