தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்: கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று வருகை!!

6 May 2021, 2:07 pm
corona vaccine - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று வர உள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் தடுப்பூசி போடமுடியாமல் தவிக்கும் சூழ்நிலையும் நிலவி வருகிறது.

இதனிடையே தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வர உள்ளன.

தற்போது 5.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், இன்று மாலை மும்பையில் இருந்து மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளன. ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 116

0

0