மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீண்டும் லாபத்தில் இயக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;- “தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்டதன் காரணமாக மின்வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.23,863.29 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் போதிலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மின்சாரக் கொள்முதல் செலவு அதிகரித்திருப்பதுதான் இழப்புக்கான முதன்மைக் காரணம் என்று கூறப்படும் நிலையில், கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் மின்சார வாரியத்தைக் காப்பாற்ற உடனடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
2021&2022 -ம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.9,130 கோடி ஆகும். மின் வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.18,400 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ள நிலையில், அதன் உதவியுடன் 2022&2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பிலிருந்து மீண்டு, சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு இலாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டின் இழப்பை விட அதிகமாக 2022&2023-ம் ஆண்டில் ரூ.9192.25 கோடி இழப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் சந்தித்திருக்கிறது. இது நியாயமற்றது.
ஒரு மாநிலத்தின் மின்சார வாரியம், சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட 5 மடங்கு அதிக தொகைக்கு வெளியிலிருந்து மின்சாரம் வாங்கினால், அது இழப்பிலிருந்து மீளவே முடியாது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டில் ரூ.10,622 கோடி மதிப்புக்கு மின்சாரம் உற்பத்தி செய்துள்ள நிலையில், ரூ.50,990 கோடிக்கு வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியுள்ளது. இதற்குக் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், பல ஆண்டுகளாக புதிய மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தபடாததுதான் காரணம்.
அதனால் ஒரு யூனிட் ரூ.3 முதல் ரூ.4 வரையிலான செலவில் வாங்கப்பட வேண்டிய மின்சாரத்தை வெளிச்சந்தையில் ரூ.9 என்ற அளவில் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து வாங்கி வருவதுதான் மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் ஆகும். இதன் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்த இழப்பு கடந்த ஆண்டில் ரூ.1,37,533 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தத் தொகைக்காக மின்வாரியம் ஆண்டு தோறும் ரூ.13,500 கோடியை வட்டியாக செலுத்துகிறது. இந்த நிலை உடனடியாக மாற்றப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு 5,700 மெகாவாட் மின்திட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. இத்திட்டங்கள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், இவற்றிலிருந்து இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யபடவில்லை. தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கான மின் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீண்டும் லாபத்தில் இயக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.