மதுரை ; தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுவதாக மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெறும் கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்திகளை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர் பிரச்சினையாக உள்ளது. காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். கடந்த ஆண்டு வீணாக 640 DMC தண்ணீர் கடலுக்கு செல்லும் நீரை திருப்பி விட வேண்டும். காவிரி குண்டாறு இணைப்பில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆற்று இணைப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் மணல் மாஃபியா கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரான்சிஸ் அவர்கள் வழக்கை முறைப்படுத்தி விசாரணை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும்.
மேலும், மணல் நமது பொக்கிஷம். அதனை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்ட 15 திருமாங்கலில் திருமண மண்டபம் விளையாட்டு திடல் போன்றவற்றில் மதுபான கடைகள் திறக்க அனுமதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை அரசு தடுக்க வேண்டும்.
தொடர்ந்து, 12 மணிநேர வேலை என்பது மிகவும் கடினமானது. 12 மணி நேர வேலை, ஆறு மணி நேரம் தூக்கம், 2 மணி நேரம் போக்குவரத்து செலவு என செய்தால் குடும்பத்தை பார்ப்பது எப்படி. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக 100 கோடி, 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்கள் வைத்திருப்பவர்கள், நீர்நிலை நீர்நிலைகளை தானாகவே பராமரித்துக் கொள்ளலாம் என கூறி உள்ளது. தனியார்களுக்கு சாதகமான மசோதா, இதனை அரசு நீக்க வேண்டும்.
அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் தனியாருக்கான அரசாக உள்ளது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். அண்ணாவின் நிலைப்பாட்டை அரசு உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் கூட்டணி குறித்து 2024 இல் முடிவு செய்யப்படும்
2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் அமைப்போம், என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.