எங்களுக்கு எப்பவும் மத்திய அரசுதான்… பெயரை மாற்றி ஒன்றும் ஆகப்போவதில்லை : அன்புமணி ராமதாஸ்

5 July 2021, 2:35 pm
Anbumani 03 updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்று அழைப்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் கூட ஒன்றிய அரசு எனக் கூறுவதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசு என அழைத்து வருவது தொடர்பாக அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது ;- எங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம். பெயரை மாற்றி அழைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தெரிவித்தது.ஆனால், தற்போது தேதி சொல்லவில்லை என்கின்றனர். அது ஆக்கப்பூர்வமான கருத்து இல்லை. தற்போதைய சூழலுக்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாய் வரை குறைக்கலாம். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம், எனக் கூறினார்.

Views: - 194

0

0