அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – அமைச்சர் விளக்கம்…!!

Author: Aarthi
16 October 2020, 12:13 pm
minister anbazhagan - updatenews360
Quick Share

இந்த மாத இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த மாதம் இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் 69 % இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்றும் சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும். சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்விக்கட்டணம் அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Views: - 29

0

0