அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா பதவி காலம் நிறைவு : வழிகாட்டுதல் குழுவை நியமித்தார் ஆளுநர்..!!!

12 April 2021, 3:57 pm
anna-university-updatenews360
Quick Share

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக வழிகாட்டுதல் குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து வந்த சூரப்பாவின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரையில், அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க வழிகாட்டுதல் குழுவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் நியமித்துள்ள இந்தக் குழுவில், பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஜ்ஜினி பார்த்தசாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Views: - 61

0

0