அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு : அண்ணா பல்கலை.,

16 May 2021, 5:15 pm
anna-university-updatenews360
Quick Share

சென்னை : அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. முதல் தொற்று பரவலுக்கு திறக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்பிற்கே சென்று விட்டன. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் வாயிலாக நடந்தது.

இதில் பி.இ, பிடெக், மற்றும் எம்.இ, எம்.டெக் படிப்புகளில் முதலாம் ஆண்டை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதனிடையே, அண்ணா பல்கலை.,யில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து, தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Views: - 243

1

0