சூரப்பாவா…? எட்டப்பாவா..? : விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் ஆளுநரை சந்திக்க முடிவு

13 November 2020, 4:10 pm
Surappa- updatenews360
Quick Share

சென்னை : தன் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்ட நிலையில், தமிழக ஆளுநரை இன்று சந்தித்து பேச அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் அனுமதியின்றி அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு தகுதி வழங்குமாறு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது, அரியர் தேர்வு விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டுள்ளது உள்ளிட்ட அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா மீது வைக்கப்பட்டது. இதனால், அவர் மீதான புகாரை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்து, 3 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட முறைகேட்டில் ஈடுபடவில்லை என கூறினார். இந்த புகார்களால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான எனது பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்றும், என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகிறது என கூறினார். எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன், பணி நியமனங்களுக்கு 8 பைசா வாங்கியிருந்தாலும் ஆதாரத்தை காட்டுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 28

0

0