என்னுடைய நேர்மை பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ அருகதை இல்லை : திமுக எம்பி ஆ.ராசா ஆவேசம்!!
கோவை மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் சார்பாக பன்னாட்டு மாநாடு கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டனர் , மேலும் நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தாயகம் திரும்பிய மலையக தமிழருக்கான இயக்கத்தின் இன்றைய தினம் கருத்தரங்கம் நடத்தப்பட்டது அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையிலிருந்து 1983 க்கு பிறகு வந்த தமிழகத்தில் மலையகத்தமிழர்களும் அடங்குவர் என்னென்ன உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் அதே நேரத்தில் நீலகிரிக்கு வந்த மலையக தமிழர்களுக்கு நில பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று இனம் பிரித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தருமாறு தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக அந்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் முகாமில் இருக்கின்ற மலையக தமிழக த்தில் எத்தனை பேருக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று என்பதை கண்டறிந்து அதனை அட்டவணைப்படுத்தி பின்னர் தமிழக அரசு இந்த ஆய்வை எப்படி மேற்கொள்கிறதோ அதேபோல இலங்கையில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசு சார்பாக ஒரு ஆய்வு அறிக்கை தயார் செய்தார்.
அந்த இரண்டு அறிக்கையும் ஒன்று சேர்ந்தது போல ஏறத்தாழ இதே மாதிரியான எண்ணிக்கை ஆய்வறிக்கைகள் இடம் பெற்று இருக்கின்றன முதலமைச்சர் அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்பாக தரப்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர்களோடு இருக்கின்ற எல்லா பிரச்சினையை அறியும் வகையில் அறிக்கையின் சம்பந்தமாக முதலமைச்சர் அவரிடம் கலந்து பேசி புதிய தீர்வை ஏட்டுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முயற்சி செய்வேன் என ஈழத் தமிழர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.
தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சம்பந்தமான கேள்விக்கு அண்ணாமலைக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் என்னுடைய நேர்மையை பேசுவதற்கு அண்ணாமலைக்கோ எல் முருகனுக்கோ பாஜகவுக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக கூறிச் சென்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.