சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக வாக்குகளை பெற்று பல தொகுதிகளில் அதிமுக வை பின்னுக்கு தள்ளி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற்றதை பாராட்டி பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் அரசியலில் வேறு வேறு கட்சிகளில் இருக்கும் நிலையில், பொது நிகழ்ச்சியில் கைக்குலுக்கி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுமேடைகளில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்வதும் தனிப்பட்ட முறையில் நட்பு பரிமாறிக்கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
சீமான் திராவிட கட்சிகளை விமர்சித்து வருகிறார். அதே போல தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். பொதுமேடைகளில் அண்ணாமலை சீமான் மீதும், சீமான் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில், சீமானை ஆர கட்டித் தழுவி கைகுலுக்கி அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.