தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!! துணைத் தலைவரில் இருந்து தலைவர்.. வளர்ச்சியை பாராட்டும் தலைவர்கள்!!

8 July 2021, 7:59 pm
Bjp Annamalai - Updatenews360
Quick Share

சென்னை : தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதோடு, பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினத்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பிரதமர் மோடியின் அமைச்சரவையை அலங்கரித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரையில் கட்சி விதிப்படி அரசு பதவி பெறும் ஒருவர் கட்சி பொறுப்புகளை வகிக்க முடியாது என்பதாகும். தற்போது, கட்சியின் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்டோர் இருந்தனர். அதிலும், வானதி சீனிவாசன் தேசிய மகளிர் அணியின் தலைவராக இருப்பதால், நயினார் நாகேந்திரனுக்கும், அண்ணாமலைக்குமே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

Image

இந்த நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலை 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 115

1

0