16 வயதில் 8 முறை கருமுட்டை விற்பனை… சிறுமிக்கு நீதி கிடைக்க காவல்துறைக்கு முழு அனுமதி கிடைக்குமா..? அண்ணாமலை கேள்வி (வீடியோ)

Author: Babu Lakshmanan
6 ஜூன் 2022, 2:05 மணி
Quick Share

சென்னை : 16 வயது சிறுமியை சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பிரபல கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டையை பணத்திற்காக விற்பனை செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமியின் தாய் சுமையா மற்றும் சுமையாவின் இரண்டாவது கணவர் சையத்அலி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், சம்பந்தப்பட்ட சிறுமி பருவமடைந்தது முதல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டையை ஒவ்வொரு முறையும் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

அதுவும் போலியான ஆதார் அட்டை தயாரித்து, 16 வயதான சிறுமியை 20 வயது என காண்பித்து இதுவரை 8 முறை கருமுட்டை விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள சூரம்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- 16 வயது சிறுமி சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கருவுற்ற பிறகு கருமுட்டைகளை 8 முறை விற்றுக் காசாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது; இதற்குக் காரணமான பின்னிலிருந்து இயக்கி வரும் சதிகார கும்பலைக் கண்டறியவேண்டும்.

குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தாயின் இரண்டாம் கணவர், இடைத்தரகர் ஆகியவர்களுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பற்றியும் விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கை விசாரித்து 16 வயது சிறுமிக்கு நீதி வழங்க மாநில காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரம் வழங்கும் என நம்புகிறோம், என தெரிவித்துள்ளார்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 736

    0

    0