ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை : எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு?.. அரசியலில் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 9:17 am
EPS Annamali - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதிமுக ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்கள் தங்கள் தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் நிறுத்தினார். இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

ஆனால், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முடிவெடுப்பதில் பாஜகவில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நிலவி வந்தது. இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து இடைத்தேர்தலில் பாஜக எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.

சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று சென்ற அண்ணாமலை அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக ஜெயக்குமார் உடன் இருந்தார்.

அண்ணாமலையுடன் பாஜக மேலிடம் பொறுப்பாளர் ரவியும் உடன் சென்றார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்துள்ள நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு பாஜக ஆதரவு அளிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இரட்டை இலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு கிழக்க்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வாய் என்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 275

0

0