பொய் வழக்கு போடுவதில் தமிழக CMக்கும் மேற்குவங்க CMக்கும் கடும் போட்டி : பாஜக நிர்வாகி சூர்யா சிவா கைதுக்கு அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 7:11 pm
Annamalai Warn DMK -Updatenews360
Quick Share

தனியார் பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யாவை காவல்துறை கைது செய்துள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரில் சூர்யாவை கைது செய்து, திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சூர்யாவை சற்று நேரத்தில் நீதிபதி முன் ஆஜர் படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜக நிர்வாகி சூர்யா சிவா கைதுக்கு அக்கட்சி தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது அறிவாலய அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யா சிவா கைது செய்யப்பட்டதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.

Views: - 520

0

0