படிக்க பணமில்லாமல் தவித்த பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவி : கல்விச் செலவை ஏற்ற அண்ணாமலை… நெகிழ்ந்து போன குடும்பம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 10:02 pm
Annmalai - Updatenews360
Quick Share

திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைக் கிராமமான இஞ்சிக்குழியின் காணி பழங்குடியின வகுப்பை சார்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஐயப்பன் மற்றும் மல்லிகா தம்பதிகளின் மகள் சகோதரி அபிநயா 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 447 மதிப்பெண்கள் எடுத்தும் தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க இயலாத சூழல் ஏற்பட்டது.

இதை கேள்விப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் சகோதரி அபிநயாவை நேரில் வரவழைத்து மாணவி அபிநயாவை பாராட்டி வாழ்த்தியதோடு கல்லூரியில் பயில முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் ரூபாய் 30 ஆயிரம் வழங்கினார்.

மேலும் இளநிலை பட்டப் படிப்புக்கு ஏற்படும் முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து அந்தக் கிராமத்தில் முதல் மாணவி கல்லூரியில் சேர்ந்து பயில பெரும் பங்காற்றியுள்ளார்.

Views: - 175

0

0