முன்கூட்டியே பிரதமரை சந்திக்கும் அண்ணாமலை… ஆளுநரும் டெல்லி பயணம்.. தமிழக அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 8:38 am
RN Ravi and Malai - Updatenews36
Quick Share

முன்கூட்டியே பிரதமரை சந்திக்கும் அண்ணாமலை… ஆளுநரும் டெல்லி செல்ல உள்ளதால் அரசியலில் பரபரப்பு!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டெல்லிக்கு செல்கின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில் டெல்லி செல்கிறார்.

அதே போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்கிறார்.

அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகிய நிலையில் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அண்ணாமலை பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

26ம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆளுநரும், பாஜக தலைவரும் டெல்லியில் முகாமிட உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 94

0

0