மருத்துவ இடங்களை வியாபாரமாக்கிய திமுக.. நீட் எதுக்குனு இப்ப புரியுதா..? ஆற்காடு வீராசாமியை வைத்து பதிலடி கொடுத்த அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 4:30 pm
Quick Share

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான அவசியம் என்ன..? என்பது குறித்து வீடியோ ஆதாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று திமுக எதிர்கட்சியாக இருக்கும் போதில் இருந்து எதிர்த்து வருகிறது. கடந்த 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது கூட, திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க, நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்களின் முதல் பணி என்ற அவர்களின் முழக்கமே முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகளை கடந்து விட்ட நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யும் வழியை கண்டுபிடிக்க முடியாமல் திமுக திணறி வருகிறது. இருப்பினும், கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, ஆளுநர் மூலமாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக தொடர்ந்து வாய்ஸ் கொடுத்து வருகிறது. இப்படியிருக்கையில், நீட் தேர்வின் அவசியம் என்ன..? என்பது குறித்தும், நீட் தேர்வு இல்லாத காலங்களில், மருத்துவ இடங்களை திமுக வியாபாரமாக்கியதை விளக்கும் வகையிலான வீடியோவை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மருத்துவ தரவரிசைப் பட்டியலை ஆளும் திமுகவினர், தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் ஒப்படைத்து விடுவதாகவும், அதில் முன்னணியில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த கல்லூரிகளில் இடம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். பின்னர், டாப் லிஸ்டில் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டு விடுவதால், தனியார் கல்லூரிகள் ஒதுக்கிய இடங்களை, பல கோடி ரூபாய் வெளியில் விற்பனை செய்வதாகவும் அண்ணாமலை அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் சொல்லுவதை திமுக மூத்த தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, ஒப்புக் கொள்ளும் விதமாக தனியார் செய்தி நிறுவனத்திடம் சிறப்பு பேட்டி அளித்த வீடியோவையும் இணைத்துள்ளார்.

இந்த இரு வீடியோக்களையும் ஒருங்கிணைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள அண்ணாமலை, நீட் தேர்வு தமிழகத்தில் வருவதற்கு முன்பாக, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மறைக்கப்பட்ட மிகப்பெரிய உண்மையும் என்றும், நீட் தேர்வு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தகுதி மற்றும் சமூக நீதிக்கு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் கொடுத்து வருகின்றனர்.

Views: - 580

1

0