அண்ணாமலை யோசிக்காமல் எதையும் பேசமாட்டார்.. நல்ல செய்தி வரும் : குஷ்பு ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 9:06 pm
Kushboo - Updatenews360
Quick Share

அதிமுக- பாஜக இடையே கூட்டணி குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தனித்து போட்டியிடுவதே சிறந்தது. ஒரு வேளை அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்கு தொண்டனாக பணியாற்றுவேன் என அதிர்ச்சி தரும் விதமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை பேசியது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்தாலும் சிலர் அவருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருந்தனர்.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர்.

அவர் ஒரு விஷயத்தை பேசுகிறார் என்றால் யோசிக்காமல் பேச மாட்டார். அவர் பேசுவது டெல்லி தலைமைக்கும் தெரியாமல் இருக்காது. எனவே இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் குழம்பவும் வேண்டாம், மற்றவர்களை குழப்பவும் வேண்டாம். எல்லாவற்றையும் கட்சி பார்த்துக் கொள்ளும் என்பதே என் கருத்து. இவ்வாறு குஷ்பு தெரிவித்திருந்தார்.

Views: - 87

0

0