திமுக எம்.பி. கவுதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி..!!

Author: Babu
16 October 2020, 6:56 pm
pon-mudi- son - updatenews360
Quick Share

அன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் திமுக எம்பியும், முன்னாள் அமைச்சரின் மகனுமான கவுதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் எந்தவிதமான விதிகளையும் கடைபிடிக்காமல் கடந்த 2008ம் ஆண்டு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கவுதம் சிகாமணி முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. சுமார் ஒரு லட்சம் டாலர் மதிப்பில் முதலீடு செய்ததன் மூலமாக, கிட்டத்தட்ட ரூ. 7 கோடிக்கும் அதிகமாக லாபம் பெற்றது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த அமலாக்கத்துறையினர், திமுக எம்பி கவுதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துக்களை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மற்றொரு எம்பியின் சொத்துக்களையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி எம்பியாக இருந்து வரும் கவுதம் சிகாமணி, முன்னாள் அமைச்சர் பொன்முடியும் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 70

0

0