கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தாகவும், இதுவரை 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை எனவும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பாஜகவினர் பதில் கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்” கூறினார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காக அவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய்யை பரப்பி வருகின்றனர் எனவும் குற்றசாட்டினார்.
இந்த நிலையில், தற்போது ரூ.15 லட்சம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பும் நேரத்தில், வாக்குறுதி அளிக்கப்படாத 15 லட்சம் குறித்து அமைச்சர் உதயநிதி தினமும் புலம்பி வருகிறார்.
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி, 1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர் போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.