இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி.. அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசாநாயக்க..!!
Author: Udayachandran RadhaKrishnan23 செப்டம்பர் 2024, 10:58 காலை
இலங்கை அதிபருக்கான தேர்தல் நேற்றையு முன்தினம் நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பின்னர் நள்ளிரவு 12 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இடதுசாரி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசாநாயக்க முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து 56 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று காலை அவர் அதிபராக பதவியேற்றார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
இதன் மூலம் இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2004ல் அமைச்சராக இருந்த அனுர குமார திசாநாயக்க, புலிகள் அமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்காக 2005ல் அவரும் கட்சியின் மற்ற அமைச்சர்களும் பதவி விலகினர்.
2004ல் இருந்து மூன்று முறை எம்பியாக தேர்வன அவர், 2019 தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். புதிய அதிபராக பொறுப்பேற்ற அனுர குமார திசாநாயக்கவுக்கு, தோல்வியடைமந்த ரணில், சஜித் பிரேமதாசா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0
0