‘நெட்ஃபிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம்’…ட்விட்டரில் suggestion கேட்ட கார்த்தி சிதம்பரம்: 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில் வைரலாகும் ட்வீட்..!!

Author: Rajesh
10 March 2022, 3:43 pm
Quick Share

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்துள்ள நிலையில் நெட்ஃபிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம் என கார்த்தி சிதம்பரத்தின் பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தைத் தவிர்த்த பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கை ஓங்கி நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் பொய்யாக்கி அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது. மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.கவிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. மாறாக, காங்கிரஸ் போட்டியாளரான பா.ஜ.க பஞ்சாப் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேர்தல் முடிவு வந்துகொண்டிருக்கும் போது அவர், ‘தற்போது நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்க வேண்டும் என்று ஏதாவது பரிந்துரையுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒருபுறம் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவருடைய ட்வீட்டில், இன்சைட் ஜாப், த பொலிடிசியன் உள்ளிட்ட படங்களை நெட்டிசன்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

Views: - 1025

0

0