இனி Google Pay, Paytm-ல் இருந்து பணம் அனுப்பினால் கட்டணம்.. ஏப்., 1 முதல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க NPCI முடிவு..!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 11:16 am
Quick Share

UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம், நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் வரை நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துவிட்டது.

இந்த நிலையில், UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உங்கள் மொபைல் வாலட்டில் (Mobile Wallet) பணம் செலுத்தினால், அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படாது.

இந்தக் கட்டணம் துறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வேளாண்மை, டெலிகாம் துறைகளுக்கு சற்று குறைவாக உள்ளது. மேலும், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களின் மூலம் UPI பயன்படுத்தி ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும்போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும். அதாவது, ஒருவர் வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனைகளை செய்தால் மட்டுமே இந்த 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 422

0

0