புதிய கட்சியை தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி : வாழ்த்து சொல்லிய நடிகர் ரஜினிகாந்த்!!

27 February 2021, 2:08 pm
rajini - arjuna moorthi - updatenews360
Quick Share

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் தனது தொடங்கப்படாத அரசியல் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்தார். ரஜினியின் அழைப்பை ஏற்று பாஜகவில் இருந்து விலகி வந்து, இந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் உடல்நிலை கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கட்சியை ரஜினியால் திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை. இனி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். இருப்பினும், ரஜினியின் வழியில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக அர்ஜுன மூர்த்தி அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்னும் பெயரில் புதிய கட்சியை அர்ஜுன மூர்த்தி இன்று தொடங்கினார்.

இந்த நிலையில், புதிய கட்சியை தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனி அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என தெரிவித்தார்.

Views: - 76

0

0