அரியர் மாணவர்களின் தேர்ச்சியை ரத்து செய்யக் கோரிய வழக்கு : தி.மு.க.வின் உள்ளடி வேலையா..? என சந்தேகிக்கும் மாணவர்கள்..!

5 September 2020, 12:00 pm
stalin - arrear - - updatenews360
Quick Share

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கில் தி.மு.க.விற்கு தொடர்பிருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு நடத்த முடியாத சூழலால், 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல, கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டதுடன், அரியர் தேர்வுக்காக கட்டணத்தை செலுத்தியுள்ள அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் முதலமைச்சரை பாராட்டி வீடியோக்களும், பதிவுகளும் வைரலாகின. அதேபோல, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் அடித்து ஒட்டப்பட்டன.

CM Poster - Updatenews360

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மவுசு கூடியதை பொறுக்க முடியாத தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள், கட்டணத்தை செலுத்தாத மாணவர்களையும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும் என் தூக்கி, தங்கள் பங்கிற்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

எந்தவித உள்நோக்கமுமின்றி, கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை பல்வேறு மாநிலங்களும் கையில் எடுத்துள்ளன.

இப்படியிருக்க, தமிழக அரசின் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு எதிரானது என்றும், அரியர் தேர்வுகளைத் தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தவோ முடியுமே தவிர, ரத்து செய்ய முடியாது என வழக்கு தொடர்ந்த திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

college_exams_updatenews360

அரியர் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் ராம்குமார், திமுகவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரின் ஜுனியர் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், அரியர் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு கூடியதால், தி.மு.க. மறைமுகமாக இந்த வேலையை செய்து வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், கொரோனா சமயத்தில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை நடத்தினால், மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி வரும் தி.மு.க., அரியர் தேர்வை மட்டும் நடத்தச் சொல்லி, புறவாசல் வழியில் நீதிமன்றத்தை நாடியிருப்பது அக்கட்சியினரின் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்துவதாகவும் மாணவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 0

0

0