அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்கிற அரசின் முடிவில் மாற்றமில்லை : உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம்..!

4 September 2020, 4:40 pm
k-p-anbalagan - updatenews360
Quick Share

சென்னை : அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்னும் அரசின் முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களை திரட்டி தேர்வு எழுதுவது கடினமானது என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இது அரியர் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழன், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்னும் அரசின் முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் ஏஐசிடிஇ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், ஒருவேளை ஏஐசிடிஇவிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்ததால் அதனை பத்திரிக்கையாளர்களுக்கோ அல்லது அரசுக்கோ வெளியிட்டிருக்க வேண்டும் எனக் கூறிய அவர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் சொந்த கருத்தை ஏஐசிடிஇவின் கருத்தாக திணிக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே, சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரியர் மாணவர்களின் ஆதரவு முதலமைச்சருக்கு பெருகி வருவதை கண்டு, இதுபோன்ற தகவல்களை திமுகவினரே பரப்பி வருவதாக நெட்டிசன்கள் அக்கட்சியினரை கடுமையாக குழுவி ஊற்றி வருகின்றனர்.

Views: - 0

0

0